செய்திகள் :

`ஒரே ஸ்டேஷனில் 13 போலீஸார் பணியிட மாற்றம்' - திருச்சி எஸ்.பி அதிரடி.. காரணம் என்ன?

post image

திருச்சி மாவட்டம், கரூர் சாலையில் உள்ளது ஜீயபுரம். இங்குள்ள காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ள போலீஸார், உள்ளூர் பிரச்னைகளில் தலையிடுவது, அதை பெரிதாக்குவது, ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுவது ஆகிய செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் திருச்சி எஸ்.பி அலுவலகத்துக்கு சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதனை, உயரதிகாரிகள் பலமுறை கண்டித்தும், அவர்களில் பலர் தங்களது அத்தகைய நடவடிக்கையில் இருந்து மாறவில்லை என்று சொல்லப்படுகிறது.

TRICHY SP

இந்நிலையில், ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பாஸ்கர், கோபி, விஜய், ராஜமாணிக்கம், செந்தில்குமார் ஆகியோர் திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கும், செல்லதுரை, ராஜாங்கம், தம்புசாமி ஆகியோர் கொள்ளிடம் காவல் நிலையத்துக்கும், அருண்குமார், சதீஷ்குமார், முத்தழகன் ஆகியோர் சமயபுரம் காவல் நிலையத்துக்கும், கலைவாணி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் பணியிடை மாற்றம் செய்து திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம் முன்தினம் உத்தரவிட்டுள்ளார். ஒரே ஸ்டேஷனை சேர்ந்த 13 போலீஸார் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

உ.பி: ரமலான் நோன்பு தொடங்க காத்திருந்த இளைஞர் சுட்டுக் கொலை... போலீஸ் விசாரணை!

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் என்ற இடத்தைச் சேர்ந்த ஹாரீஸ் என்ற கட்டா என்பவர் தனது வீட்டிற்கு வெளியில் அதிகாலை 3.15 மணிக்கு நின்று கொண்டிருந்தார். அவர் முன்னதாக கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்திருந்தார்... மேலும் பார்க்க

PWD: `ரூ.1.50 லட்சம் கையாடல்' - 40 ஆண்டுகள் கழித்து பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம், மூட்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆரணி குளத்தில் கடந்த 1984-85 -ஆம் ஆண்டில் கலிங்கு வெட்டியதில் ரூ.1,51,000 கையாடல் செய்ததாக கடந்த 1987 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால... மேலும் பார்க்க

சென்னை: மதியம் அடிதடி; இரவில் கொலை - இளைஞரைக் கொலை செய்த ரௌடியின் பின்னணி

சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மனைவி ஜெயந்தி. ராஜா தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, பாரதியார் தெரு சந்திப்பு பகுதியில் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்ற... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பள்ளிக்குச் சென்ற 3-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை - போக்சோவில் இளைஞர் கைது!

தஞ்சாவூர், வல்லம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர் கடந்த 11-ம் தேதி தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் சாலையோரத்தில், பள்ளிக்கு செல்வதற்காக மூன்றாம் வகுப்பு படிக... மேலும் பார்க்க

கும்பகோணம்: கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன்(29). இவர் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக இருந்து வந்தார். மேலும் அங்கு கேன்டீன் ஒன்றையும் நடத்தி வந்தார். இதனால் இவரை அ... மேலும் பார்க்க

திருச்சி: 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - 16 வயது சிறுவனை கைது செய்த போலீஸ்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இவனது வீட்டின் அருகே, 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு பாலியல... மேலும் பார்க்க