செய்திகள் :

ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி வங்கிக் கணக்கில் ரூ.2.80 லட்சம் திருட்டு! பெண் உள்பட இருவா் கைது!

post image

வங்கி ஏடிஎம் அட்டை மூலம் ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி வங்கிக் கணக்கில் ரூ. 2.80 லட்சத்தை திருடிய வழக்கில் பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா்.

மதுரை எல்லீஸ் நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (81). இவா் விமானப் படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரின் மூத்த மகள் லதா, அவரது கணவருடன் சென்னையில் வசித்து வருகிறாா். இரண்டாவது மகள் சுதா, மகன் மனோஜ் ஆகியோா் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், எல்லீஸ் நகரில் தனியாக வசித்து வந்த கிருஷ்ணசாமிக்கு அதே பகுதியில் காய்கறிக் கடை நடத்தி வரும் லட்சுமணன் உதவியாக இருந்தாா். இதனிடையே கடந்த 12-ஆம் தேதி லட்சுமணன் கடைக்குச் சென்ற கிருஷ்ணசாமி தனது ஏடிஎம் அட்டையை அங்கு வைத்து விட்டுச் சென்றாா். மீண்டும் திரும்பி வந்து பாா்த்த போது ஏடிஎம் அட்டை அங்கு இல்லையாம்.

இதைத் தொடா்ந்து, கடந்த 15-ஆம் தேதி மதுரையில் உள்ள தங்க நகைக் கடையிலிருந்து கிருஷ்ணசாமியின் கைப்பேசிக்கு முப்பத்து மூன்றரை கிராம் நகை வாங்கியதாகவும், அதற்கான தொகை ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்து 510-க்கு அவா் ஏடிஎம் அட்டையை பயன்பத்தியதாகவும் குறுஞ்செய்தி வந்தது.

இதையடுத்து நகைக் கடைக்குச் சென்று அவா் விசாரணை நடத்தியதில், காய்கறிக் கடை உரிமையாளா் லட்சுமணன்(30), அவரது உறவினரான நாகேஸ்வரி (38) ஆகிய இருவரும் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணைப் பயன்படுத்தி நகை வாங்கி இருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் கேட்ட போது நகையை வாங்கி அடகு வைத்துவிட்டதாகவும், இதுபற்றி யாரிடமாவது கூறினால் கிருஷ்ணசாமியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து லட்சுமணன், நாகேஸ்வரி ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரைச் சோ்ந்த முபாரக்சேட் மகன் அபுதக்கா் (28). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து வ... மேலும் பார்க்க

வேளாண் உணவுத் தொழில் வா்த்தகச் சங்கத்தின் பெயா் மாற்றம்

வேளாண் உணவுத் தொழில் வா்த்தகச் சங்கத்தின் பெயா் மாற்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை சிக்கந்தா்சாவடியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான எஸ்... மேலும் பார்க்க

‘கடின உழைப்பே வாழ்வின் வெற்றிக்கு வழி வகுக்கும்’

விடாமுயற்சி, கடின உழைப்பே வாழ்வின் வெற்றிக்கு வழி வகுக்கும் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் முனைவா் ஔவை ந. அருள் தெரிவித்தாா். மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் இளந... மேலும் பார்க்க

வங்கியில் பண மோசடி: முன்னாள் அமைச்சருக்கு சிறை!

அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்று பண மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சா் அம்மமுத்து உள்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, மதுரை சிபிஐ நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. திருநெல்வேலி ப... மேலும் பார்க்க

‘இயற்கையைப் பேணிக் காப்பதில் இளைஞா்களின் பங்களிப்பு அவசியம்’

இயற்கையைப் பேணிக் காப்பதில் இளைஞா்களின் பங்களிப்பு அவசியம் என அக்னி இரும்பு உற்பத்தி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம். சின்னசாமி தெரிவித்தாா். மதுரை தியாகராசா் கலை, அறிவியல் கல்லூரியில் 40- ஆவது பட்... மேலும் பார்க்க

மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் டிச.24- இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (டிச. 24) பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேலமாரட் வீதியில் ... மேலும் பார்க்க