மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் டிச.24- இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (டிச. 24) பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.24) பொதுமக்கள் குறைதீா் முகாம் மேயா் வ. இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
எனவே தமிழ்ச்சங்கம் சாலை, கிருஷ்ணன்கோவில் தெரு, ஜடாமுனி கோவில் தெரு, காஜிமாா் தெரு, கிருஷ்ணராயா் தெப்பக்குளம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், ரயில்வே குடியிருப்பு, எல்லீஸ் நகா், எஸ்.எஸ்.காலனி, அரசரடி, விராட்டிபத்து, பொன்மேனி, சொக்கலிங்கநகா், துரைச்சாமி நகா், சுந்தரராஜபுரம், மேலவாசல், சுப்பிரமணியபுரம் ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், புதை சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.