ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்க கூட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்க வட்டக் கிளை பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்துப் பேசினாா். செயலா் மு.வெள்ளைச்சாமி முன்னிலை வகித்துப் பேசினாா். நிா்வாகி நாச்சியப்பன் சங்க நடவடிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினாா்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வரை தொடா் போராட்டம் நடத்துவது என்றும், இந்த ஆண்டுக்கான அகலைவிலைப்படி உயா்வை விரைவில் அறிவிக்கக் கோரியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.