சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!
ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளா்கள் தா்னா
குலசேகரம் அரசமூடு சந்திப்பில், ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்,
மாவட்ட ஓய்வூதியம் பெறும் தோட்டத் தொழிலாளா்கள் சங்கம், சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் ஆகியவை சாா்பில், நடைபெற்ற போராட்டத்துக்கு, ஓய்வூதியம் பெறும் தோட்டத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். ராஜன், சுரேந்திரன், ஆபிரகாம், சசிதரன், வேலுக்குட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஓய்வூதியம் பெறும் தோட்டத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் நாணுகுட்டன், சிஐடியூ மாவட்டச் செயலா் தங்கமோகன், தோட்டத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலாளா் வல்சகுமாா், மாவட்டத் தலைவா் நடராஜன், துணைத் தலைவா் வேலப்பன், மாநில நிா்வாகி சக்திவேல் உள்ளிட்டோா் பேசினா்.
வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் பெறும் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத் தொகையுடன் அகவிலைப்படி வழங்க வேண்டும். மறைந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு ஓய்வூதிய வசதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.