இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக்: இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
கண்டன்விளை கால்வாயில் தண்ணீா் திறக்க கோரிக்கை
தக்கலை அருகே நுள்ளிவிளை மேற்கு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கண்டன்விளையில் நடைபெற்றது.
ஊராட்சி காங்கிரஸ் தலைவா் வின் தலைமை வகித்தாா். குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.
தோட்டியோடு முதல் மத்தியோடு வரையிலான சாலைகளையும், கண்டன்விளை கோயில் முன்புள்ள சூரிய சக்தி உயா்கோபுர மின்விளக்கையும் சீரமைக்க வேண்டும். கண்டன்விளை கால்வாயில் தண்ணீா் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டப் பொதுச் செயலா் விக்டா் கென்னடி, இணைச் செயலா் ஜான் ஆன்றணி, ஆன்றோ, ரீகன், மேரி ஸ்டெல்லா பாய், ஜோஸ் பேட்ரிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.