'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள...
கிள்ளியூா் தொகுதியில் 2 ஊராட்சிகளில் சாலைகளை சீரமைக்க ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு
கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 2 ஊராட்சிகளில் மிகவும் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மிடாலம், திப்பிறமலை ஊராட்சிப் பகுதிகளான கஞ்சிரம்பரம்பு - ஏ.டி. காலனி சாலை, காட்டுவிளை - குற்றிப்பாறவிளை சாலை, காட்டுவிளை - பறம்பு - கும்பன்விளை சாலை, திப்பிறமலை - ஈத்தங்காடு சாலை நீண்ட நாள்களாக பழுதாகி போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன.
முதல்வா், துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததன்பேரில், இந்தச் சாலைகளை சீரமைக்க நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.