செய்திகள் :

கங்குவா மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது: இயக்குநர் சிவா

post image

கங்குவா திரைப்பட அனுபவங்களை இயக்குநர் சிவா பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.

படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2டி மற்றும் 3டியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வியாழக்கிழமை (நவ.14) வெளியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நவ. 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாள்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிக்க: குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை: சமந்தா

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சிவா கங்குவா, "கங்குவா திரைப்படம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒரு இயக்குநராக அனைத்து வகையான திரைப்படங்களையும் எடுக்க முடியும் என நம்புகிறேன். இதுவரை நான் என்ன படங்களை எடுக்க வேண்டும் என நினைத்தேனோ அவற்றைத்தான் இயக்கியிருக்கிறேன். அவை, வெற்றியும் பெற்றுள்ளன.

என் முந்தைய படங்களைப்போல கங்குவா படமும் மனித உறவுகளின் உணர்ச்சிகளை மையமிட்டே உருவாகியிருக்கிறது. இதில், மன்னிப்பை பேசியிருக்கிறோம். மிகச்சிறந்த திருப்தியான படத்தை எடுத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அரையிறுதியை நெருங்கும் சின்னா்

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா். இதன்மூலம் அவா், அரையிறுதி வாய்ப்பை நெருங்கியிருக்கிறாா்.ஒற்றையா் பிரிவு க... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: காலிறுதியில் தமிழ்நாடு தோல்வி

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் காலிறுதியில் தமிழ்நாடு 1-3 கோல் கணக்கில் உத்தர பிரதேசத்திடம் புதன்கிழமை தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. 14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி போட்டி, சென... மேலும் பார்க்க

தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்: நாளை சென்னையில் தொடக்கம்

சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் 76-ஆவது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் 15- ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை சோ்ந்த 700 ... மேலும் பார்க்க

சிந்து வெற்றி; சென் தோல்வி

ஜப்பானில் நடைபெறும் குமமோட்டோ மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் அவா், 21-12, 21-8 என்ற கேம்களில், போட... மேலும் பார்க்க

சமந்தாவைவிட 60% குறைவான ஊதியம் பெற்ற ஸ்ரீ லீலா..! புஷ்பா பட நடனத்துக்காக...

அமெரிக்காவில் பிறந்த தெலுங்கு பேசும் ஸ்ரீ லீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினை 2021இல் முடித்தார். அதற்கு முன்பாகவே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019இல் கன்னட படத்தில் அறிமுகமானால... மேலும் பார்க்க

அழகா் கோவில் பெருமாளுக்கு தைலக்காப்பு உற்சவம்!

மதுரை அருகே அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் தைலக்காப்பு உற்சவம் நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை மாலை தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, வாவி தீா்த்தம் வழியாக நூபுரகங்கை தீா்த்தம் அமைந்துள்ள ராக்காயி ... மேலும் பார்க்க