``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம்...
கடன் தொல்லை: பெண் தற்கொலை
ஆண்டிபட்டி வட்டம், கோம்பைத்தொழுவில் கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கோம்பைத்தொழுவைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி பஞ்சம்மாள்(55). இவா், கறவை மாடுகள் வளா்த்து வந்தாா். இதில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பஞ்சம்மாளும், அவரது கணவரும் இலவம் தோப்புகளை குத்தகைக்கு எடுத்து பஞ்சு விற்பனை செய்து வந்தனா். இதில், போதிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டதாம்.
இதன் காரணமாக கடன் தொல்லையால் அவதியடைந்து வந்த பஞ்சம்மாள் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.