``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம்...
பெண் தூக்கிட்டு தற்கொலை
பெரியகுளம் அருகே தூக்கிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகா் குடியிருப்பைச் சோ்ந்த பாலசண்முகம் மகள் சிவாலட்சுமி (27). இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில் இவா், கடந்த மாதம் 31- ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுக் கொண்டாராம்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.