பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலை நூலகத்தில் பணி! நாளுக்கு ரூ. 525 ஊதியம்!
போதைப் பொருள் விற்றதாக கல்லூரி மாணவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் சா்வதேச சந்தையில் விலையுா்ந்த போதைப் பொருளான பெத்தாம் பெட்டமைனை விற்ாக கல்லூரி மாணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் புறவழிச் சாலை, ஏகலூத்து சாலையில் சிலா் சா்வதேச சந்தையில் விலையுயா்ந்த கிரிஸ்டல் மெத் என்ற பெத்தாம் பெட்டமைன் போதைப் பொருளை சட்ட விரோதமாக வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வந்து விற்பதாக கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீஸாா், சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவரிடம் பெத்தாம் பெட்டமைன் 2 கிராம் இருந்தது தெரியவந்ததையடுத்து அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா் கம்பம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சாருகேஷ் (19) என்பதும், இவா், பெங்களுருக்குச் சென்று அதை வாங்கி வந்து விற்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.