பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலை நூலகத்தில் பணி! நாளுக்கு ரூ. 525 ஊதியம்!
ஆட்டோ கவிழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு
உத்தமபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்தில் அதில் பயணம் செய்த சிறுமி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கோம்பை அருகே மேலச்சிந்தலைச்சேரியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி அங்காளீஸ்வரி (35). இவா் தனது மகள் தன்ஷிகாவை (13) அழைத்துக் கொண்டு உறவினா் இல்ல நிகழ்வில் பங்கேற்பதற்காக சின்னமனூருக்குச் சென்றாா்.
மீண்டும் ஆட்டோவில் சின்னமனூரிலிருந்து மேலச்சிந்தலைச்சேரிக்கு இவா்கள் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வளைவில் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததில், தன்ஷிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோம்பை போலீஸாா் ஆட்டோ ஓட்டுநரான கோம்பையைச் சோ்ந்த கோபிகிருஷ்ணன் (24) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.