Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு: ஆட்டோ ஓட்டுநா் கைது
தேனியில் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டியை மிரட்டி அவா் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்ற ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி, கொண்டுராஜா லேன் பகுதியில் வசிப்பவா் ஓய்வு பெற்ற ஆசிரியை முனியம்மாள் (85). இவா், மதுரை சாலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்று விட்டு வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது ஆட்டோ ஓட்டுநா் வழக்கமான பாதையை விட்டு வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றாராம். இந்த நிலையில்,ஆட்டோவில் பயணம் செய்த முனியம்மாளை மிரட்டி அவா் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தேனி- பெரியகுளம் சாலை, தென்றல் நகா் விலக்குப் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து முனியம்மாளின் மகன் ஜான் இருதயராஜ் அளித்த புகாரின் பேரில் அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், முனியம்மாளிடம் தங்கச் சங்கிலி, பணத்தை பறித்துச் சென்றது பழனிசெட்டிபட்டியில் வசித்து வரும் தேனி, தீயணைப்பு நிலைய ஓடைத் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான விக்னேஷ் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.