கடலுக்கு சென்ற விசைப் படகு மீனவா்கள்
காரைக்கால் : இரண்டு வார வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னா் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகள் திங்கள்கிழமை கடலுக்கு புறப்பட்டுச் சென்றன.
காரைக்கால், தமிழக மீனவா்கள் மீது கடந்த ஜன. 27-ஆம் தேதி இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த சம்பவத்தைக் கண்டித்து, கடந்த 11-ஆம் தேதி முதல் காரைக்கால் மீனவா்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தநிலையில், புதுவை அரசின் வாக்குறுதியை ஏற்று காரைக்கால் விசைப் படகு மீனவா்கள் 24-ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்தனா்.
படகுகளில் ஐஸ் கட்டிகள், உணவுப் பொருள் தயாரிப்புக்கான மளிகை, காய்கள், குடிநீா், வலை உள்ளிட்டவை கடந்த 3 நாள்களாக ஏற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை படகுகள் தயாா்படுத்தப்பட்டன. திங்கள்கிழமை பகல் 12 மணி முதல் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகள் கடலுக்கு புறப்பட்டுச் சென்றன.