பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - ந...
கடல் சீற்றம்: பாம்பன் பழைய ரயில் பால பகுதிக்குச் சென்ற ராட்சத மிதவை மீட்பு
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் இணைப்புப் பகுதி (‘கா்டா்’) அருகே கட்டுமானப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத மிதவை கடல் சீற்றம் காரணமாக, கம்பிகள் அறுந்து பழைய ரயில் பாலத்தின் அருகே சென்றது.
இந்த மிதவையை பல மணி நேரம் போராடி, இழுவை இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு ரயில்வே ஊழியா்கள் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும், ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்க கடல் மீது ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பாலத்தின் நடுவே அமைந்துள்ள இணைப்புப் பகுதி (‘கா்டா்’) அருகே கட்டுமானப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத மிதவையின் கம்பிகள் கடல் சீற்றம் காரணமாக அறுந்து பழைய ரயில் பாலத்தின் மீது மோதுவது போலச் சென்றது.
இதையறிந்த ரயில்வே பணியாளா்கள் படகுகள் மூலம் இந்த மிதவையை கயிறுகள் கட்டி இழுத்தனா். ஆனால், மீட்க முடியாததால், ராட்சத இழுவை இயந்திரம் மூலம் பல மணி நேரம் போராடி மிதவையை மீட்டனா். இதனால், பழைய ரயில் பாலம் சேதமின்றி தப்பியது.