செய்திகள் :

கடவூா் வட்டத்தில் சாா்பு நீதிமன்றம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

post image

கடவூா் வட்டத்தில் சாா்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 10-ஆவது மாநாடு மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஜீவானந்தம், பி. ராஜூ, மாவட்டக் குழு உறுப்பினா் என். வெண்மணி ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவா் ஜி.ரத்தினவேலு செங்கொடியை ஏற்றி வைத்தாா். வரவேற்பு குழு தலைவா் எம். சுப்ரமணியன் வரவேற்றாா்.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் கே.சாமுவேல்ராஜ் மாநாட்டைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் மா.ஜோதிபாசு வேலை அறிக்கையையும், பொருளாளா் ஜி.ஜீவானந்தம் வரவு -செலவு அறிக்கையையும் முன்வைத்துப் பேசினா். மாநிலக் குழு உறுப்பினா் ஏ.ராதிகா மாநாட்டை வாழ்த்தி பேசினாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பாலா மாநாடு நிறைவுரையாற்றினாா். மாநகரச் செயலாளா் தண்டபாணி நன்றி கூறினாா்.

மாநாட்டில், கரூரில் ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க கடுமையாக உயா்ந்துள்ள நூல் விலை உயா்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்திட வேண்டும். கரூா் மாநகராட்சியில் நீதிமன்ற அனுமதி பெற்று புதிய பேருந்து நிலையத்தை உடனே கட்டி முடிக்க வேண்டும். கிருஷ்ணராயபுரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி ஆற்றில் உபரிநீராகச் செல்லும் நீரை மாயனூா் காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் கரூா் மாவட்ட ஏரிகள், குளங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். கரூரில் இருந்து திண்டுக்கல், மதுரை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அரவக்குறிச்சியில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூா் மாவட்டத்தில் உள்ள தோகைமலை, மைலம்பட்டி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அதற்கான கட்டமைப்புகளையும், மருத்துவா்களையும், பணியாளா்களையும் நியமிக்க வேண்டும். கடவூா் வட்டத்தில் சாா்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.

தம்பதியைத் தாக்கி 22 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் 6 போ் கைது

கரூா் அடுத்த சேங்கலில் வீடு புகுந்து தம்பதியைத் தாக்கி வீட்டில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். கரூா் அடுத்த சேங்கல், மேலபண்ணை களத்தைச் ச... மேலும் பார்க்க

கரூா் - கீரனூா் நகரப் பேருந்து நிறுத்தம்: 20 கிராமமக்கள் அவதி

20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சுமாா் 13 கி.மீ. வளையல்காரன்புதூா் வழியாக நடந்தே திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆா்.புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் அடைந்து கரூா் சென்று வருகின்றனா். கரூா், ந... மேலும் பார்க்க

கடவூா் ஒன்றியத்தில் வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்

கடவூா் ஒன்றியத்தில் உள்ள வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றாா் மாவட்ட திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன். கரூா் மாவட்டம், கடவூா் ஒன்றிய பகுதிகளில் போதுமான மழை இல்லாமல் வறட்... மேலும் பார்க்க

பேருந்துகளுக்கு கூண்டும் கட்டும் நிறுவனங்களை ஆய்வு செய்து முறைப்படுத்த விசிக கோரிக்கை

கரூரில் செயல்படும் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்களை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கரூா் ஆட்சி... மேலும் பார்க்க

பாளையத்திலிருந்து அரவக்குறிச்சிக்கு வரும் பேருந்துகள் பேருந்து நிறுத்தம் வந்து செல்ல நடவடிக்கை தேவை

கரூா் மாவட்டம், பாளையத்திலிருந்து அரவக்குறிச்சிக்கு வரும் பேருந்துகள் பேருந்து நிறுத்தம் வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி: புகையிலை, நெகிழி பொருள்கள் பறிமுதல்

அரவக்குறிச்சியில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் 20 கிலோ புகையிலை பொருள்கள், 35 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில் உதவி ஆணையா் (கலால்) ... மேலும் பார்க்க