செய்திகள் :

கட்டாயத் திருமண முயற்சி; கல்லூரி மாணவி கடத்தல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

post image

கரூர் அருகே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி (வயது -19). இவர் கல்லூரிக்கு கரூர் ஈசநத்தம் சாலையில் உள்ள ராயனூர் பகுதியில் உள்ள பொன்நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கல்லூரி நோக்கி, சக மாணவிகளுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது, ஆம்னி காரில் வந்த இளைஞர்கள் சிலர் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அந்த வாகனத்தில் ஏற்றிக் கடத்திச் சென்னர். இச்சம்பவம் தொடர்பாக தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் மாணவியின் சகோதரி அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் விசாரணையை தீவிரபடுத்திய போலீஸார், கல்லூரி மாணவியை காதலித்து வந்த ஈசந்த்தம் அருகே கட்டட தொழிலாளி நந்தகோபால் என்ற இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர் மாணவியைக் கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டனர்.

போலீஸ் ஸ்டேஷன்

இந்நிலையில், செல்போன் சிக்னல்களை கொண்டு பின் தொடர்ந்த போலீஸார், திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை அருகே மாணவியை மீட்டு, நந்தகோபாலை கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அதோடு, மாணவியை கடத்த உடந்தையாக இருந்தாக நந்தகோபாலின் தாய் கலா, பாட்டி பொன்னம்மாள் , உறவினர்கள் சரவணன், பழனிசாமி உள்ளிட்ட 4 பேர்களையும் கைது செய்தனர்.

போலீஸாரின் தீவிர விசாரணையில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்களான கல்லூரி மாணவி மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், இரு வீட்டார் சம்மதம் பெற முயற்சி செய்தபோது, கல்லூரி மாணவிக்கு தந்தை இல்லாததால் அக்காவின் கணவர், நந்தகோபாலுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

நந்தகோபால்

இந்நிலையில்தான், நந்தகோபாலின் குடும்பத்தினர் கல்லூரிக்கு வந்த மாணவியை கடத்திச் சென்று நந்தகோபாலுக்கு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களிடம் இருந்து கல்லூரி மாணவியை மீட்ட போலீஸார், கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்துவைக்கும் ஏற்பாட்டில் இருந்த நந்தகோபாலின் குடும்பத்தினரை கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற வழக்கில் ஒரு குடும்பமே கைதாகியுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சென்னை: இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்த இளைஞர்; சிறையில் அடைத்த போலீஸ்; பின்னணி என்ன?

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன்பு சினிமா பார்க்க அமைந்தகரைப் பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்குச் சென்றார்... மேலும் பார்க்க

திருச்சி: `முறையற்ற தொடர்பு' - கண்டித்த தொழிலதிபர் அடித்துக் கொலை... 5 வாலிபர்கள் கைது

திருச்சி, அரியமங்கலம் பெரியாா் தெரு, அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (வயது: 64). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவா், கடந்த திங்கள்கிழமை இரவு காட்டூா் கைலாஷ்நகா் பகுதியில் உடலில் காயங்களுடன... மேலும் பார்க்க

`கோரிக்கை நிறைவேறும்வரை என் உடலை எடுக்காதீர்கள்'- வேளாண்மைக்கு தண்ணீர் கேட்டு உயிரை மாய்த்த விவசாயி!

மகாராஷ்டிரா மாநிலம், தொழில் வளர்ச்சி மட்டுமல்லாது விவசாயத்திலும் சிறந்து விளங்குகிறது. ஆனாலும் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் மகாராஷ்டிராதான் முதலிடத்தில் இருக்கிறது. ... மேலும் பார்க்க

8 வயது மகளை 29-வது மாடியிலிருந்து வீசிவிட்டு, விபரீத முடிவெடுத்த தாய்.... மும்பையில் பயங்கரம்!

மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் தனது கணவரோடு வசித்து வந்தவர் மைதிலி (35). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள். இவர்கள் 29வது மாடியில் வசித்து வந்தனர். மைதிலியின் கணவர் ஆசிஷ் கான்டிராக்டராக இருக்கி... மேலும் பார்க்க

கைகொடுத்த யூடியூப், தந்தையின் செல்வாக்கு; துபாயில் 14 கிலோ தங்கம் நடிகை ரன்யாவிடம் கைமாறியது எப்படி?

கடந்த 3ம் தேதி கன்னட நடிகையும், மூத்த ஐ.பி.எஸ்.அதிகாரியின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவர் விமான நிலையத்தில் இருந்து எந்த வித சோதனையும... மேலும் பார்க்க

ஆடு மேய்ப்பதில் தகராறு; வயதான தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர் கைது; திருப்பூரில் கொடூரம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சல்பாளையம் சாலை பெரியதோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (80). இவரது மனைவி பருவதம் (72). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இ... மேலும் பார்க்க