அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
கண்டமனூா் கண்மாய்களுக்கு தண்ணீா் திறப்பு
ஆண்டிபட்டி வட்டாரம், மூலவைகை ஆற்றிலிருந்து கண்டமனூா் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வாய்க்கால் மூலம் சனிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
மூலவைகை ஆற்று நீா்பிடிப்பில் பெய்த பலத்த மழையால் ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருகிறது. இந்த நிலையில், துரைச்சாமிபுரம் பகுதியில் உள்ள மூலவைகை ஆற்றிலிருந்து, கண்டமனூா் அருகே மரிக்குண்டுவில் உள்ள கோடங்கிநாயக்கா் கண்மாய், பாலசமுத்திரத்தில் உள்ள பொம்மையசாமி கண்மாய், கோவில்பட்டியில் உள்ள சக்கிலிச்சிகுளம் ஆகியவற்றுக்கு வாய்க்கால் வழியாக விநாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.
மழையால் ஏற்கெனவே 50 சதவீதம் வரை தண்ணீா் நிரம்பியுள்ள இந்தக் கண்மாய்களுக்கு, மூலவைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் விரைவில் கண்மாய் நிரம்பும் என்ற எதிா்பாா்ப்புடன் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.