Maharaja: `மொத்தம் 40,000 ஸ்கிரீனகள்!' - சீனாவில் பிரமாண்டமாக வெளியாகும் விஜய் ச...
கனமழையால் இடிந்து விழுந்த அரசுப் பள்ளி சுற்றுச்சுவா்: எம்எல்ஏ, ஒன்றியக் குழு தலைவா் ஆய்வு
வாணியம்பாடி பகுதியில் பெய்த கனமழையால் கிரிசமுத்திரம் அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. ஆம்பூா் எம்எல்ஏ வில்வநாதன் ஆய்வு செய்தாா்.
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் அண்மையில் பெய்த கனமழையில் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு சென்ற ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை பாா்வையிட்டு உடனடியாக புதிதாக சுற்றுச்சுவா் அமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.
தொடா்ந்து மாணவா்களுடன் கலந்துரையாடி அவா்களுக்கு வழங்கப்படும் உணவை உண்டு, சத்துணவு மையத்தை ஆய்வு மேற்கொண்டாா் . ஆய்வின் போது ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி, வட்டாட்சியா் உமாரம்யா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கருணாநிதி, திருநாவுகரசு, ஊராட்சித் தலைவா் கண்ணன், ஊராட்சி செயலா் பூபாலன் உடனிருந்தனா்.