செய்திகள் :

கமல் - 237 படத்தின் நிலை என்ன?

post image

நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதியுள்ளார். மேலும், அமெரிக்கா சென்று ஏஐ தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டதால் இப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு இருக்கலாம் எனத் தெரிகிறது.

தக் லைஃப் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததாலும் வணிக ரீதியாக வசூலையும் ஈட்டவில்லை என்பதாலும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் கமல் - 237 படத்தின் படப்பிடிப்பு தாமதமாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் - 2, தக் லைஃப் படங்களால் கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள் இப்படத்தைப் பாதிக்கலாம் என்பதால் கமல் ஹாசன் என்ன முடிவெடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க: ஆர்யாவின் புதிய பட பெயர்!

பாலகிருஷ்ணாவின் அகண்டா -2 டீசர்!

நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படம் அகண்டா. இப்படத்தில் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர... மேலும் பார்க்க

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடல்!

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயக... மேலும் பார்க்க

ஆர்யா - நிகிலா விமல் நடிக்கும் அனந்தன் காடு டீசர்!

ஆர்யா - நிகிலா விமல் நடிக்கும் அனந்தன் காடு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார... மேலும் பார்க்க

நிறைவடைந்தது பொன்னி தொடர்!

வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய பொன்னி தொடர் 663 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் பொன்னி. இத்தொடரில் நாயகனாக சபர... மேலும் பார்க்க

ஆர்யாவின் புதிய பட பெயர்!

நடிகர் ஆர்யா நடிக்கும் அவரது 36-வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை... மேலும் பார்க்க