ஜூன்11 ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் மாபெரும் வேளாண் கண்காட்சி; ச...
Akhanda 2: "என் சிவன் அனுமதியில்லாம..." - சூலாயுதத்துடன் மிரட்டும் பாலய்யா!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா என்ற பாலய்யாவின் அகண்டா 2 திரைப்பட டீசர் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு போயாபதி ஶ்ரீனு இயக்கத்தில் பாலய்யா நடித்த அகண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.
இதில் ப்ரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதிபாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாக அமைந்தது.
அகண்டா 2 திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே இதற்கான எதிர்பார்ப்புகள் மிகுந்திருந்தன.
இசையமைப்பாளர் தமன் உட்பட முதல் பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களே இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆந்திரபிரதேசம் மாநிலம், ஹிந்துபூர் தொகுதி எம்.எல்.ஏவான பாலய்யாவுக்கு இது 109வது திரைப்படமாம். நாளை அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியிட்டிருக்கின்றனர்.