செய்திகள் :

Akhil Akkineni: நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனிக்கு திருமணம் - ஜைனப் ரவ்ட்ஜியை மணந்தார்!

post image

நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனியின் திருமணம் இன்று(ஜூன்6) நடைபெற்று முடிந்திருக்கிறது.

சமீபத்தில்தான் நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா தம்பதியினரின் மூத்த மகனான நாக சைதன்யா - சோபிதா துலிபலா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி
அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி

இந்நிலையில் இன்று அவர்களது இளைய மகனான அகில் அக்கினேனி  - ஜைனப் ரவ்ட்ஜி இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவில் வீட்டில் எளிமையாகத் திருமணம் நடைபெற்றிருக்கிறது. 

நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில்  கலந்து கொண்டுள்ளனர். அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மணமகள் ஜைனப் , மும்பையில் ஒரு ஓவியராகவும் வாசனை திரவியம் தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுல்பி ராவ்ஜியின் மகள் ஆவார்.

அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி
அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி

வரும் ஜுன் 8ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

கடந்த மூன்று வருடங்களாக அகில், ஜைனப் காதலித்து வந்தனர். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Thug Life: ``கன்னடத்தை குறைத்து மதிப்பிடவில்லை..'' - கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரமோஷனை பட குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்ற... மேலும் பார்க்க

kannappa: “எங்க படத்தைத் திருடிட்டு கொடுக்க மாட்றாங்க"- தொலைந்த ஹார்ட் டிஸ்க் குறித்து விஷ்ணு மஞ்சு

மோகன் பாபு தயாரிப்பில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இத்திரைப்படம் வரும் ஜூன் 27ம... மேலும் பார்க்க

Kannappa: காணமல் போன ஹார்டுடிஸ்க்; ஊழியர் தலைமறைவு - புகாரில் சொல்லப்பட்டுள்ளது என்ன?

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் பான் - இந்தியா திரைப்படமான கண்ணப்பா, வெளியாவதற்கு ஒரு மாதமே உள்ள சூழலில் படத்தின் முக்கியமான காட்சிகள் இருந்த ஹார்டு டிஸ்க், தயாரிப்பு நிறுவனமான ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டர... மேலும் பார்க்க

Sandeep Reddy Vanga: ``இளம் நடிகையை வீழ்த்த இதை செய்தீர்களா?"- வைரலாகும் தெலுங்கு இயக்குநரின் பதிவு!

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி, ரன்பீர் கபூரின் அனிமல் போன்ற படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இவரின் அடுத்தப்படம் "ஸ்பிரிட்" . இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக... மேலும் பார்க்க

Tollywood: ``நன்றியுணர்வே இல்லை" - திரைத் துறையை சாடும் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல... மேலும் பார்க்க