செய்திகள் :

kannappa: “எங்க படத்தைத் திருடிட்டு கொடுக்க மாட்றாங்க"- தொலைந்த ஹார்ட் டிஸ்க் குறித்து விஷ்ணு மஞ்சு

post image

மோகன் பாபு தயாரிப்பில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’.

இத்திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் அதன் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

விஷ்ணு மஞ்சு
விஷ்ணு மஞ்சு

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? என்பதை நடிகர் விஷ்ணு மஞ்சு சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்தித்து விளக்கம் அளித்திருந்திருக்கிறார். 'கண்ணப்பா’ படம் பிரமாண்டமான படைப்பாக உருவாகி இருக்கிறது.

பொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும். ஒன்று எடிட்டிங் ஸ்டூடியோவுக்கும், மற்றொன்று தயாரிப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும்.

அந்தவகையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதன் சில காட்சிகள் டிரைவ் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால், அதை எங்கள் தரப்பு கேட்கவில்லை. கிராபிக்ஸ் நிறுவனத்தினர் எங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டார்கள்.

அதாவது, எங்கள் நிறுவன முகவரி மற்றும் ஜி.எஸ்.டி முகவரி என இரண்டு உள்ளது. ஜி.எஸ்.டி முகவரி அப்பாவுடைய இல்லம். அங்கு தான் எங்கள் தொடர்புடைய அனைத்து கடிதம் மற்றும் கூரியர்கள் வரும். சம்மந்தப்பட்டவர்கள் அதை அங்கு சென்று வாங்கிக் கொள்வோம்.

அதுபோல், எனக்கான அந்த டிரைவ் அந்த முகவரிக்கு வந்திருக்கிறது. அப்போது, மனோஜ் வீட்டில் இருக்கும் இரண்டு பேர் அந்த கூரியரை வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த விஷயமே எங்களுக்கு தெரியாது.

அப்போது, இரண்டு வாரங்களுக்குப் பிறகு ‘கண்ணப்பா’ படத்தின் காட்சிகள் லீக் ஆனால் எப்படி இருக்கும், என்ற ஒரு எக்ஸ் பதிவு வெளியானது. அதை வைத்து தான் எங்களுடைய காட்சிகள் அடங்கிய டிரைவ் கைமாறியிருப்பது தெரிய வந்தது.

 விஷ்ணு மஞ்சு
விஷ்ணு மஞ்சு

சரி இதை பெரிதுப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன், சமாதன முறையில் அதை கேட்டோம், ஆனால் அதற்கு சரியான பதில் வரவில்லை. சரி, போலீஸ் மூலம் சமாதனமாக கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து, அதையும் செய்தோம். அப்போதும் எங்களுக்கு சரியான பதில் வரவில்லை.

போலீஸும் முறையாக எப்.ஐ.ஆர் போடாமல் எங்களால் விசாரிக்க முடியாது, என்று சொல்லிவிட்டார்கள். இப்போது எப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எங்கள் படத்தை திருடிவிட்டு எங்களுக்கே கொடுக்க மறுகிறார்கள். படத்தின் அந்த காட்சிகள் வெளியானாலும், அதை ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Kannappa: காணமல் போன ஹார்டுடிஸ்க்; ஊழியர் தலைமறைவு - புகாரில் சொல்லப்பட்டுள்ளது என்ன?

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் பான் - இந்தியா திரைப்படமான கண்ணப்பா, வெளியாவதற்கு ஒரு மாதமே உள்ள சூழலில் படத்தின் முக்கியமான காட்சிகள் இருந்த ஹார்டு டிஸ்க், தயாரிப்பு நிறுவனமான ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டர... மேலும் பார்க்க

Sandeep Reddy Vanga: ``இளம் நடிகையை வீழ்த்த இதை செய்தீர்களா?"- வைரலாகும் தெலுங்கு இயக்குநரின் பதிவு!

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி, ரன்பீர் கபூரின் அனிமல் போன்ற படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இவரின் அடுத்தப்படம் "ஸ்பிரிட்" . இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக... மேலும் பார்க்க

Tollywood: ``நன்றியுணர்வே இல்லை" - திரைத் துறையை சாடும் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல... மேலும் பார்க்க

"நடிக்க முடியாவிட்டாலும், திரைப்படங்களை உருவாக்க முடியும் என..." - சொல்கிறார் தயாரிப்பாளர் சமந்தா!

சமந்தா 'சுபம்' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் சமந்தா ஒரு க... மேலும் பார்க்க

``படித்துக்கொண்டே நடிக்கிறேன்... தெலுங்கு கற்றுவருகிறேன்" - லவ் டுடே நடிகை இவானா

'லவ் டுடே' படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் இவானா. தொடர்ந்து பலத் தமிழ் படங்களில் நடித்துவரும் இவர், தற்போது ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள "சிங்கிள்" படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவிருக்கி... மேலும் பார்க்க

Allu Arjun: ``நான் நடிச்சதுல 18 படம் பாக்ஸ் ஆபிஸ்ல..'' - அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குநர் அட்லியுடன் இணைந்திருக்கிறார். அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்... மேலும் பார்க்க