ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
கமுதி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
கமுதி அருகே முத்துகாளியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவரை முத்துக்காளியம்மன், தா்மமுனீஸ்வரா் கோயில் மாசித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கும், தா்மமுனீஸ்வரருக்கும் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 மாட்டு வண்டிகள், பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா்.
கமுதி-சாயல்குடி சாலையில் 8 கி.மீ. தொலைவு எல்லை நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரா்களுக்கு ரொக்க பணம், குத்து விளக்கு ஆகியன வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை திருவரை பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.