செய்திகள் :

`கருணை காட்ட வேண்டும்’ எனக் கேட்ட ஞானசேகரன் - அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் தீர்ப்பு விவரங்கள்

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24ம் தேதி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 தேதி கைது செய்தனர். பின்னர், கோட்டூர்புரம் காவல்துறை விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 28ம் தேதி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 2025 ஜனவரி மாதம் 5ம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் இன்று தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் இன்று தீர்ப்பு

வழக்கை விசாரித்த சிறப்பு புலானாய்வு குழு, கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ம் தேதி தள்ளுபடி செய்து அன்றைய தினமே குற்றச்சாட்டு பதிவு செய்தது.

'யார் அந்த சார்?’

அதில் பாலியல் வன்கொடுமை, ஆதராங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல், அந்தரங்க புகைப்படம் எடுத்து வெளியிட்டது, பெண் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மற்றும் பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது.

இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் ஆளும் திமுக கட்சியை சேர்ந்தவர் என்னும் குற்றச்சாட்டு கிளம்ப, இந்த விவகாரம் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் புகார் சொன்ன மாணவி பாலியல் கொடுமை நடந்த அன்று ஞானசேகரன் வேறு ஒருவரிடம் போனில் பேசியதாகவும் அவரை சார் என அழைத்ததாகவும் புகாரில் சொன்னதாக தகவல் பரவ 'யார் அந்த சார்?’ என்னும் கேள்வியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

கடந்த 20ம் தேதி வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைத்தவர். அதில்

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, ``குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து நிரூபிக்கபட்டுள்ளது. அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளது. இவர் தான் குற்றம் புரிந்து உள்ளார். எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இரு தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்ற அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு தீர்ப்புக்காக குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

கருணை காட்ட வேண்டும்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனிடம், குற்றத்தை ஏற்கிறீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஞானசேகரன், `அப்பா இறந்துவிட்டதால் தாயை பராமரிக்க வேண்டும் என்பதால், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். தனக்கு 8 வது படிக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும்’ எனவும் கோரிக்கை வைத்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``அரிதிலும் அரிதான இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும்.குற்றவாளிக்கு எந்த கருணையும், இரக்கமும் காட்ட கூடாது. அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையடுத்து, தீர்ப்பை அறிவித்த நீதிபதி, ஞானசேகரனுக்கு எதிரான 11 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவித்தார். மேலும், தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக வழக்கை ஜூன் 02 ம் தேதி தீர்ப்பை தள்ளிவைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`குறைந்தபட்ச தண்டனை கொடுங்கன்னு ஞானசேகரன் கதறி அழுதார், ஆனா..!' - அரசு தரப்பு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என இன்று(மே 28) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மே... மேலும் பார்க்க

`அரிதிலும் அரிதான வழக்கு’ அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் க... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டம்: `மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது’ - நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

சூதாட்டத்துக்கு வித்திடும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய செயலிகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனு... மேலும் பார்க்க

தாயார் இறந்த மறுநாளே சட்ட பணி; 11 வழக்குகளில் தீர்ப்பு கூறிவிட்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் அபய் எஸ் ஓகா. கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 22 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய அபய் ஓகா பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்... மேலும் பார்க்க

குழந்தை தலையில் முட்டை உடைத்து டிக்டாக் வீடியோ - தாய்க்கு ரூ.1.7 லட்சம் அபராதம்! - ஏன் தெரியுமா?

ஸ்வீடனிலுள்ள ஹெல்சிங்போர்க்கை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர், தனது மகளுடன் இணைந்து ஆப்பிள் கேக் செய்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவால் மன உளைச்சலுக்கு உள்ளான பார்வை... மேலும் பார்க்க

Waqf Bill: `முஸ்லிம் மறுமை, இந்து மோட்சம், கிறிஸ்தவ அர்பணிப்பு, ஆகமொத்தம்..' - உச்ச நீதிமன்ற நீதிபதி

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான இடைக்காலத் தடை விதித்திருந்த உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத் திருத்தம் தொடர்பான வாதங்களை உச்ச நீதிமன்றம் கேட்டு வருகிறது. மூன்றாம் நாளான நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.க... மேலும் பார்க்க