செஞ்சிலுவை சங்க தோ்தல்: ஜூன் 4, 5 தேதிகளில் வேட்பு மனு தாக்கல்
`குறைந்தபட்ச தண்டனை கொடுங்கன்னு ஞானசேகரன் கதறி அழுதார், ஆனா..!' - அரசு தரப்பு வழக்கறிஞர்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என இன்று(மே 28) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில் தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம் அளித்திருக்கிறார். ``குற்றவாளி ஞானசேகரனுக்கு எதிராக 11 வழக்குகளில் தடய அறிவியல் மூலமாகவும், சாட்சி மூலமாகவும் அரசு தரப்பில் நிரூப்பிக்கப்பட்டதால் குற்றவாளி என்று திர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, `தண்டனையை குறைக்கவேண்டும் என்றும், எனக்கு அம்மா மட்டுமே, அப்பா இல்லை. என்னுடைய குடும்பத்தை நான் தான் பார்த்துகொள்ள வேண்டும். மேலும் தொழில் பாதிக்கும். தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்று கதறி அழுதார்.
இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். கருணைக் காட்டக்கூடாது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் செய்திருக்கிறார்.

அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் ” என்று வழக்கறிஞர் விளக்கம் அளித்திருக்கிறார்.