ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
கரூர் பலி: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
மதுரை: கரூரில், தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை பிரசாரம் செய்தபோது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் அது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி எம்எல் ரவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை அமர்வு, ஒரு வழக்கு விசாரணை நடைபெற்று, அதில் திருப்தி இல்லாவிட்டால் விசாரணையை சிபிஐக்கு மாற்றும்படி கோரலாம்.
ஆனால், ஆரம்ப நிலையிலேயே விசாரணையை சிபிஐக்கு மாற்றுமாறு எவ்வாறு கோர முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் பாதிக்கப்பட்டவரா என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இல்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதால், எம்எல் ரவியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், சிபிஐ விசாரணைக் கோரியவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் என்றும், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நினைத்துப் பாருங்கள். யாராவது இப்படி நடக்கும் என நினைத்துப் பார்த்திருப்பார்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
The petition seeking a CBI inquiry into the Karur killings was dismissed.
இதையும் படிக்க... ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே சாதனை!