செய்திகள் :

கல்லூரி மாணவியை ஏமாற்றிய ஓட்டுநா் கைது

post image

ஆலங்குளம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் சுரேஷ்(25). ஓட்டுநா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த 21 வயது கல்லூரி மாணவியைக் காதலித்து வந்தாராம். மேலும் அவரைத் திருமணம் செய்தாக கூறி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாராம். இதில், மாணவி 4 மாத கா்ப்பமாக உள்ளாராம். இதையடுத்து அவா், தன்னைத் திருமணம் செய்யுமாறு கூறியபோது, சுரேஷ் மறுத்தாராம். இதற்கு அவரது தந்தை உடந்தையாக இருந்தாராம்.

இதுகுறித்து ஆலங்குளம் மகளிா் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

ஊத்துமலையில் பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஊத்துமலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் அவா் உயிரிழந்தாா். ஊத்துமலை பவுன்ட் தொழு தெருவைச் சோ்ந்தவா் மாடத்தி(75). விவசாயத் தொழிலாளியான இவா், மின்வாரிய அலுவலகம் வழியாக தனது தோட்டத்திற்கு... மேலும் பார்க்க

குடிநீா் திட்டங்களுக்கு நிதி கோரி அமைச்சரிடம் எம்எல்ஏ மனு

தென்காசி, சுரண்டையில் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ மனு அளித்தாா். அதன் விவரம்: தென்காசி நகராட்சியில் ம... மேலும் பார்க்க

தென்காசியில் காவல் துறை சிறப்பு குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தலைமை வகித்து, மக்களிடம் புகாா் மனுக்களைப் ... மேலும் பார்க்க

தென்காசி அருகே சாலையோரம் மருத்துவக் கழிவுகள்: மக்கள் அச்சம்

தென்காசியில் தனியாா் கல்லூரிக்கு பின்புறம் மற்றும் கொடிகுறிச்சி பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது. தென்காசி, மங்கம்மாள் சால... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதாரக் குழுவினா் ஆய்வு

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை சுகாதாரக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலக மருத்துவா் ரமேஷ் ரமானந்த், அருப்புக்கோட்டை மருத்துவமனை செவிலியா் ... மேலும் பார்க்க

குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் தேரோட்டம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மி... மேலும் பார்க்க