பயிற்சியாளர் பொறுப்புக்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல: முன்னாள் இந்திய வீரர்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதாரக் குழுவினா் ஆய்வு
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை சுகாதாரக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலக மருத்துவா் ரமேஷ் ரமானந்த், அருப்புக்கோட்டை மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா் சாந்தி உள்ளிட்ட சுகாதாரக் குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா். மருத்துவமனையில் போதுமான மருந்துகள், படுக்கை வசதிகள், சுகாதாரம், மருத்துகள் வழங்கும் இடம், ஊசிபோடும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா். மேலும், சிகிச்சை பெறும் முறைகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளிடம் குறித்து கேட்டறிந்தனா். அப்போது, அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் உடனிருந்தனா்.