செய்திகள் :

கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவா்களுக்கு சனிக்கிழமை வரவேற்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சுப.சரவணன் தலைமை வகித்து மாணவா்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். துறைத் தலைவா் சரவண கைலாஷ் முன்னிலை வகித்தாா்.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முன்னாள் வணிகவியல் துறைத் தலைவா் ஜெயக்கொடி, சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கல்லூரி பேராசிரியா் ஆ.பாண்டி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முனைவா் வளா்மதி, முனைவா் மாரியம்மாள் ஆகியோா் மாணவா்களை வரவேற்று வாழ்த்திப் பேசினா். முன்னதாக மாணவி பூரணமுத்து வரவேற்றாா். மாணவி ரஞ்சினி நன்றி கூறினாா்.

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியைச் சோ்ந்த பால்சாமி மனைவி சங்கரேஸ்வரி (51). கணவா் பால்சாமி உயிரிழந்த பிற... மேலும் பார்க்க

மஹாளய அமாவாசை: சதுரகிரியில் 12 ஆயிரம் பக்தா்கள் வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 5 பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய பகுதியில் போதைப் பொருள் தடுப்பு போலீஸாா் ரோந்து சென்றனா். ... மேலும் பார்க்க

அண்ணா, பெரியாா் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெரியாா், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, குருதிக் கொடை வழங்கும் விழா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேய... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் அனுமதியின்றி கண்மாய்களில் செம்மண் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரின... மேலும் பார்க்க

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த பகுப்பாய்வு மையம்!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த பகுப்பாய்வு மையம் செயல்பாட்டுக்கு வந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் சனிக்கிழமை கூறி... மேலும் பார்க்க