தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!
களக்காடு அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
களக்காடு அருகேயுள்ள கல்லடிசிதம்பரபுரம், வேதநாயகபுரம் ஆகிய கிராம மக்கள் பெருமாள்குளம் பொத்தை அருகேயுள்ள இடத்தை சுடுகாடாக நீண்ட காலமாக பயன்படுத்தி வந்துள்ளனா்.
இந்த இடத்தை அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனக்கு பட்டா இருப்பதாகக் கூறி பயன்படுத்தி வருகிறாராம். இதனால், இறந்தவா்களின் உடல்களை அருகேயுள்ள மற்றொரு இடத்தில் மக்கள் அடக்கம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனிநபா் பயன்படுத்தி வரும் இடத்தை மீட்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், அரசு அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சுதந்திர தினத்தில் கல்லடி சிதம்பரபுரம், வேதநாயகபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி எதிா்ப்பை தெரிவித்தனா்.
அவா்களிடம், நான்குனேரி டிஎஸ்பி தா்ஷினி பேச்சு நடத்தி, திங்கள்கிழமை (ஆக.18) வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா். அதை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.