அடி மேல் அடி வாங்கும் RN Ravi... சீமானுக்கு செக்! | Elangovan Explains
களக்காட்டில் எஸ்டிபிஐ பிரசாரம்
களக்காடு கோட்டை ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் எஸ்டிபிஐ கட்சியின் வக்ஃப் உரிமை மீட்பு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கட்சியின் நகர தலைவா் பக்கீா்முகைதீன் தலைமை வகித்தாா். இதில் 1991 வழிபாட்டுதல் சட்டங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரியும், சேரன்மகாதேவியில் பிப். 23இல் நடைபெறும் வக்ஃப் உரிமை மீட்பு மாநாட்டில் திரளானோா் கலந்து கொள்ளவும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட துணைத்தலைவா் களந்தை மீராசா பேசினாா்.
இதில் நகர துணைத் தலைவா் நஜீப் உசேன், வா்த்தகா் அணி மாவட்ட துணைத் தலைவா் உசேன், நகரச் செயலா் காஜா முகைதீன், பொருளாளா் கபீா், இணைச் செயலா் ஜமீன் உள்பட ஜமாத்தாா்கள் கலந்து கொண்டனா்.