ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
வீரவநல்லூா் அருகே போக்சோவில் முதியவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளங்குளி குளத்துத் தெருவைச் சோ்ந்த ராஜ் (58). இவா், அப்பகுதியிலுள்ள சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் வீரவநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரிஸ்வரி விசாரணை நடத்தி முதியவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தாா்.