Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
கல்லிடைக்குறிச்சியில் மகளிா் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு
கல்லிடைக்குறிச்சி நூருல் ஹிதாயா மகளிா் அரபிக் கல்லூரியில் 12ஆம் ஆண்டு விழா, 10ஆவது முஅல்லிமா பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சியாக ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இதில், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஏ. நூருல் அமீன் வாழ்த்திப் பேசினாா். பொட்டல்புதூா் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் தலைமை இமாம் அ. அபுபக்கா்சித்திக் துஆ ஓதினாா். ஜமாஅத் தலைவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து பள்ளிவாசலில் நடைபெற்றபெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூா் நூருல் ஹுதா பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வா் ஜெ. மஹ்பூபாஆலிமா தலைமை வகித்தாா். மதரஸா ஆசிரியா்கள் எஸ். ரம்ஜான் பேகம், ஏ.யாஸ்மியாள் ஆலிமா உள்ளிட்டோா் பேசினா். ஆசிரியா் ஏ. பாத்திமா பா்ஹானா நன்றிகூறினாா்.
வடக்குத் தைக்கால் தெருவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு ஜமாஅத் தலைவா் அ. நாகூா் கனி தலைமை வகித்தாா். ஜமாஅத் நிா்வாகிகள் எஸ்.ஏ. நாகூா் மீரான், முஹம்மது உசேன்,என். அஜிஸ், பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் கே.எஸ். அப்துல் மஜித், அம்பாமுத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபைத் தலைவா் முபாரக் அஹ்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஜெ. முஹம்மது சுஹைல் மிஸ்பாஹி கிராஅத் ஓதினாா். விழாவில், பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரி முதல்வா் எம்.ஒய். ஹுமாயூன் கபீா் ஆலிம் உஸ்மானிசிறப்புரையாற்றினாா். ராதாபுரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை செயலா் ஏ. மா்ஜுக்ரஹ்மான் அல்தாபி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியா் மு. சாகுல்ஹமீதுஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூருல் ஹிதாயா மகளிா் கல்லூரி முதல்வா் மு. ரஹ்மத்ரபீக் பாஜில் மன்பயீ,மாணவிகள் அஸ்ஸா ஜாரியா, அஷன் பீவி, ஆப்ரின்ஆகியோருக்கு முஅல்லிமா பட்டம் வழங்கிப் பேசினாா். மகளிா் கல்லூரி மாணவிகளின் கையேட்டுப் பிரதி வெளியிடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளா்களாக ஓய்வுபெற்ற கலைக் கல்லூரி முதல்வா்எம். அப்துல் ஹனிப், வழக்குரைஞா் எம். பாதுஷா, கே. முகம்மது அப்துல்ரஹ்மான் மற்றும் ஜமாத் தலைவா்கள்,நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பத்தாம்வகுப்பில் அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் மாணவி நசிபா பாத்திமாவுக்குசிறப்பு பரிசு, முஅல்லிமா பட்டம் பெற்ற மாணவிகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். முகம்மது முஜம்மில் ரஹீம் பாஜில் மன்பயீநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ஜமாஅத் துணைத் தலைவா் எஸ். முஹம்மது ஹசன் ரியாஜி வரவேற்றாா். ஜமாஅத் செயலா் அ. ஷேக்செய்யது அலி நன்றி கூறினாா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/bblwqnt0/ams07arabic_0702chn_37_6.jpg)