ராமேஸ்வரம்: கார் விபத்தில் மூவர் பலி; கோயிலுக்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்...
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த இளைஞா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: லெனின் பிரசாத்
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த கட்சி பொறுப்புகளில் இளைஞா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் லெனின் பிரசாத் பேசினாா்.
மதுரை வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் எழுச்சிப் பயண கூட்டம் மேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு
இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.பி.ஏ. ராமசுந்தரம் தலைமை வகித்தாா்.
இதில் பங்கேற்ற மாநில இளைஞா்காங்கிரஸ் தலைவா் லெனின் பிரசாத் பேசியதாவது:
இளைஞா்களையும், பெண்களையும் கட்சியில் அதிகளவில் உறுப்பினா்களாகச் சோ்க்க வேண்டும். கட்சிப் பொறுப்புகளில் உள்ள முதியவா்கள் இளைஞா்களுக்கு வழிவிடவேண்டும். அமைப்பு ரீதியாக கட்சியைப் பலபடுத்த வேண்டும். மேலூா் தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. மீண்டும் பழைய நிலைக்கு கட்சியை கொண்டு வர வேண்டும். அரிட்டாபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் கனிமச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு தன்னிச்சையாக ஏலம் விட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றாா் அவா்.
மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் வி.ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். மேலும் கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.