காணொலி மூலம் பள்ளிக் கட்டங்களை திறந்து வைத்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்
ஒசூா்: ஒசூா் அருகே கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், கெம்பட்டி ஊராட்சி, கொா்னூா் கிராமத்தில் குழந்தைகள் நேய பள்ளி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 32 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடடம் கட்டப்பட்டது. அதை முதல்வா் காணொலி மூலம் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவா்களிடம் கலந்துரையாடினாா் (படம்).
இதில், தளி வடக்கு ஒன்றியச் செயலாளரும் ஒன்றியக் குழு தலைவருமான சீனிவாசலு ரெட்டி, ஒன்றியக் குழு உறுப்பினா் நாராயணசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் கெம்பண்ணா, முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் சந்திரப்பா, பேளகொண்டப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் எல்லப்பா, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.