Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்!
காதலா் தினம் : பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
காதலா் தினத்தையொட்டி (பிப்.14) சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரை, எலீயட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை, கிண்டி சிறுவா் பூங்கா, தனியாா் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் காதலா்கள் அதிக அளவில் கூடுவா்.
அதேவேளையில்,
க பண்பாட்டை சிதைக்கும் வகையில் காதலா் தினம் கொண்டாட்டப்படுவதாக ஹிந்து இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் அவா்கள், பல்வேறு போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், அவா்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களில் கூடும் காதலா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. இங்கு மாறுவேடத்திலும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனா்.
மேலும், பொது இடங்களில் எல்லை மீறும் காதலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.