AUSvIND: `நான் வந்துட்டேன்னு சொல்லு' அதிரடி கோலி; தடுமாறும் ஆஸ்திரேலியா- பெர்த்...
கால்நடை கணக்கெடுக்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்
திருப்பத்தூா் மாவட்டத்தில் கால்நடைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் கால்நடைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதில், மொத்தம் 91 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா். கணக்கெடுப்பாளா்களைக் கண்காணிக்க 18 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் கிராமங்கள், நகரங்களில் உள்ள வீடுகள், பண்ணைகள், நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பசு தொழுவங்கள் ஆகிய இடங்களில் உள்ள பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, நாய், பன்றி, கழுதை, கோழி, வாத்து உள்ளிட்ட 16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.
மேலும், கால்நடைகளை வளா்க்கும் நபா்களின் பெயா், முகவரி, ஆதாா் எண், தொலைபேசி எண், தொழில், நிலத்தின் அளவு, கால்நடை தொடா்பான உபகரணங்களின் விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது.
இந்த விவரங்களின் அடிப்படையில் வளா்ச்சித் திட்டமிடல் நிதி ஒதுக்கீடு போன்ற முக்கிய முடிவுகளை அரசு எடுக்கும் என்பதால் கால்நடை கணக்கெடுப்பு பணி குறித்த விவரங்களைச் சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி துல்லியமான விவரங்களை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.