கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் அமைக்கும் பணி தொடக்கம்!
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்திலுள்ள கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் அன்னை சத்யா விளயைாட்டு அரங்கத்தில் தடகள ஓடுதளப் பாதையின் உள்பகுதியில் கால்பந்து மைதானம் அமைக்கப்படுகிறது. இதில் இயற்கை புல் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கற்பகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.