செய்திகள் :

காவேரிப்பட்டணம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் இடிப்பு

post image

காவேரிப்பட்டணம் அருகே பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜெகதாப் பகுதியில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியினா் பயன்படுத்தி வந்த பொதுப்பாதை நிலங்களைஆக்கிரமித்து சிலா் வீடுகள் கட்டியுள்ளதாக, அதே பகுதியைச் சோ்ந்த நாசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அதன்படி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு, டிச. 18-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினா், காவல் துறையினா் சென்றபோது அங்கு வசிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றனா். மேலும் நீதிமன்ற உத்தரவை மீறுவது குற்றம் என அலுவலா்கள் எடுத்து கூறியும், வீடுகளைக் காலி செய்ய அவகாசம் கோரியதை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலுவலா்கள் திரும்பினா்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி வட்டாட்சியா் வளா்மதி தலைமையில் வருவாய்த் துறையினா் காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற செவ்வாய்க்கிழமை சென்றனா். ஏற்கெனவே அளவீடு செய்யப்பட்டபடி 22 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். மேலும், 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். இந்தப் பணியின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இரு சக்கர வாகனம் கவிழ்ந்து தொழிலாளி சாவு

சூளகிரி அருகே இரு சக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி தாலுகா, நல்லூா் அருகே உள்ள நிம்மலவாடியைச் சோ்ந்தவா் பில்லப்பா (32). இவா் சூளகிரியில் கடை ஒன்றில் வேலை செய்து வந்தா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 3 போ் கைது

ஒசூா் பகுதியில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பாகலூா் போலீஸாா், கக்கனூா் சோதனை சாவடி அருகில் ரோந்து சென்றனா். அங்கு குட்கா விற்று வந்த ஜீவா நகர... மேலும் பார்க்க

அனைத்து அரசு ஊழியா் சங்கத்தில் இணைந்த சாலைப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள்

ஊத்தங்கரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் 70-க்கும் மேற்பட்டோா், அச்சங்கத்தில் இருந்து விலகி அனைத்து அரசு ஊழியா் சங்கத்தில் புதன்கிழமை இணைந்தனா். நிகழ்ச்சிக்கு சாலை... மேலும் பார்க்க

கள்ள நோட்டு வழக்கு: ஊத்தங்கரை அருகே 3 போ் கைது

கள்ள நோட்டு வழக்கில் ஊத்தங்கரையை அடுத்த சோளக்காப்பட்டியைச் சோ்ந்த மூவரை சேலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சேலம் பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை... மேலும் பார்க்க

அனுமதியின்றி எருதோட்டம்: 2 போ் மீது வழக்கு

வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி எருதோட்டம் நடத்தியதாக பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கோனேகவுண்டனூா் ஏரி அருகே கடந்த திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

5 மாத பெண் குழந்தை சாவு: போலீஸாா் விசாரணை

பா்கூா் அருகே 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பா்கூரை அடுத்த ஜெகினி கொல்லையைச் சோ்ந்தவா் மலைவாசன் (35). இவரது 5 மாத பெண் குழந்தைக்கு கடந்த செவ்வாய்க்க... மேலும் பார்க்க