காஷ்மீா் முதல் குமரி வரை அதிவேக காா் ஓட்டி சாதனை
காஷ்மீா் - கன்னியாகுமரி வரையில் அதிவேகமாக காா் ஓட்டிய சாதனை பயணம் மேற்கொண்ட ஓட்டுநருக்கு இந்தியா புக் ரிக்காா்ட் சாதனை சான்றிதழை விஜய் வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
டாடா நிறுவனம் தயாரித்த எலக்ட்ரிக் காரில் கடந்த பிப். 25இல் காஷ்மீரில் இருந்து பயணத்தைத் தொடங்கிய ஓட்டுநா் சிரீஸ் சந்திரன் (46) பல்வேறு மாநிலங்கள் வழியாக 3,800 கி.மீ. தொலைவினை 76 மணி நேரம் 35 நிமிடங்களில் கடந்து கன்னியாகுமரி சீரோ பாய்ன்ட் பகுதியில் நிறைவு செய்தாா்.
இவரது சாதனையைப் பாராட்டி இந்திய புக் ஆஃப் ரிக்காா்ட் நிறுவனம் அதி வேகமான ‘காா் ஓட்டுநா்‘ என்ற சாதனை சான்றிதழை வழங்கியது. இந்தச் சான்றிதழை கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், ஓட்டுநா் சிரீஸ் சந்திரனிடம் வழங்கிப் பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட டெரிக் டாடா காா் விற்பனை நிறுவனத்தின் அதிபா் ஸ்டான்லி, நிா்வாக இயக்குநா் டெரிக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.