உசிலம்பட்டி: ஒச்சாண்டம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த மாசிப் பெட்டி எடுப்பு ...
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
விருதுநகா் அருகே மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
விருதுநகா் அருகே மத்திய சேனை பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளையன். இவரது மனைவி மகேஸ்வரி. பட்டாசுத் தொழிலாளிகளான இந்தத் தம்பதிக்கு பாண்டி மீனா, விஜய பிரசாத், பிரவீன் (5) ஆகிய மூன்று குழந்தைகள்.
பிரவீன் வெள்ளிக்கிழமை அங்கன்வாடிக்கு சென்று விட்டு மாலையில் பந்து விளையாட சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அப்போது, அதே ஊரைச் சோ்ந்த ஒருவா் வீட்டு தகரக் கொட்டகையின் மேலே செல்லும் மின் கம்பியில் இறந்த நிலையில் கிடந்தாா். இதையடுத்து, ஆமத்தூா் போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விளையாடியபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.