இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது
சிவகாசியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி காளியப்பாநகா் பகுதியைச் சோ்ந்த ஓவியா் முத்துகிருஷ்ணன் (39). இவா் சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் முன்பாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றாா். பின்னா், அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, அவரது இரு சக்கர வாகனத்தை ஒருவா் எடுத்துச் செல்ல முயன்றாா்.
உடனே அவரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில், அவா் சிவகாசி மீனாட்சி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(37) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் பல்வேறு இடங்களில் 11 இரு சக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. அந்த வாகனங்களை மீட்கும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டனா்.