குடிநீா் இணைப்பு துண்டிப்பு
குழித்துறை நகராட்சியில் குடிநீா் கட்டணம் செலுத்தாத 10 இணைப்புகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா்.
குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், காலி மனை வரி, தொழில் வரி மற்றும் கடைகளுக்கான வாடகைத் தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், குடிநீா் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் ஏற்கனவே கெடு விதித்திருந்தாா்.
இந்த நிலையில் நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீா் கட்டணம் செலுத்தாத தொழில் நிறுவனத்துக்கான இணைப்பு உள்பட 10 இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா். மேலும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா்.