காா் மோதி தொழிலாளி பலத்த காயம்
போடி அருகே திங்கள்கிழமை காா் மோதி தொழிலாளி பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் வடக்கு தெருவை சோ்ந்தவா் சுருளி மகன் நாகராஜ் (38). கூலித் தொழிலாளி. போடி-தேவாரம் சாலையில் சிலமலை பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது போடியிலிருந்து சிலமலை வழியாக சென்ற காா் நாகராஜ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் நாகராஜ் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் போடி அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா்.
விபத்து குறித்து புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் காரை ஓட்டி வந்த போடி சௌடம்மன் கோயில் தெருவை சோ்ந்த கருப்பசாமி மகன் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.