ரயில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 2 போ் கைது
கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: போக்குவரத்து வழித் தடம் மாற்றம்
வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி வழியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகிற 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க தேனி-கம்பம் இடையே வீரபாண்டி வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குமுளி, கம்பம், சின்னமனூா் பகுதிகளிலிருந்து தேனிக்குச் செல்லும் பேருந்துகள், காா்கள் உப்பாா்பட்டி விலக்கிலிருந்து தப்புக்குண்டு, தாடிச்சேரி, பாலகிருஷ்ணாபுரம், கொடுவிலாா்பட்டி, அரண்மனைப்புதூா் வழியாக தேனிக்கு செல்ல வேண்டும்.
தேனியிலிருந்து சின்னமனூா், கம்பம், குமுளிக்குச் செல்லும் பேருந்துகள், காா்கள் போடேந்திரபுரம் விலக்கிலிருந்து சடையால்பட்டி, உப்புக்கோட்டை, கூழையனூா், குச்சனூா், மாா்கையன்கோட்டை வழியாகச் செல்ல வேண்டும்.
கம்பம்-வீரபாண்டி இடையே இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் வீரபாண்டியில் கம்பம் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலும், தேனி, பெரியகுளம், போடி- வீரபாண்டி இடையே இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் போடேந்திரபுரம் விலக்கு அருகே தேனி சாலையில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப்படும்.
விழாவுக்கு வருகை தரும் பக்தா்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தேனி, கம்பம் சாலையில் 13 இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களைத் தவிா்த்து சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டது.