Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார...
கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு
சிவகாசி அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள், கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் தியாகராஜபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் (57) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து மாரனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.