இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
தடையை மீறி ஆா்ப்பாட்டம்: 31 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ாக 32 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு புதுப்பட்டி திரு.வி.க. தெருவில் உள்ள சுப்பிரமணியா் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரால் தொடக்கப் பள்ளிக்கு பட்டியலின மாணவா்கள் செல்ல முடியவில்லை. இதனால், இந்தச் சுற்றுச்சுவரை தீண்டாமை சுவா் என அறிவித்து அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கிராம மக்கள் சுவரை இடிக்க வலியுறுத்தி, வத்திராயிருப்பு புதுப்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இவா்கள் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், விவசாய தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் உள்பட 31 பேரை வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.