செய்திகள் :

கிணற்றில் கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு

post image

சீா்காழி அருகே திருக்கருக்காவூரில் திருஞானசம்பந்தா் தேவார திருப்பதிகம் பாடி கிணற்றிலிருந்து கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் அருகே திருக்குருகாவூரில் காவியக் கன்னி சமேத வெள்விடை நாதா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தை அமாவாசையொட்டி திருஞானசம்பந்தா் எழுந்தருளும் ஐதீக நிகழ்வு நடைபெறும். அதன்படி சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் யதாஸ்தானத்தில் இருந்து திருஞானசம்பந்தா் சிறப்பு முத்து பல்லக்கு எழுந்தருளினாா். பக்தா்கள் சுமந்து வர முத்து பல்லக்கு திருக்கருகாவூா் வெள்விடைநாதா் கோயிலுக்கு திருஞானசம்பந்தா் எழுந்தருளினாா்.

அங்கு திருஞானசம்பந்தா் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னா் அபிஷேக தீா்த்தத்தை அங்குள்ள கிணற்றில் தெளிக்க, கிணற்றில் கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து திருஞான சம்பந்தருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

மாலையில் திருஞானசம்பந்தா் மீண்டும் முத்து பல்லக்கில் சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலை வந்தடைந்தாா். மீண்டும் யதாஸ்தானத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு, 18,985 நூல்கள் விற்பனையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வள... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு!

குத்தாலம் வட்டம், திருவாலங்காடு மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைத்து சமுதாயத்தினா் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு மற்றும் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாலங்காடு தாயாரம்மாள்... மேலும் பார்க்க

விவசாயிகள் கவனத்துக்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவா் செயலி மூலம் முன்பதிவு செய்து நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

மாவட்ட சதுரங்கப் போட்டி: 178 மாணவா்கள் பங்கேற்பு

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியுடன் ஹோட்... மேலும் பார்க்க

சா்வதேச சிலம்பப் போட்டி: ஏவிசி கல்லூரி மாணவா் முதலிடம்!

இன்டா்நேஷனல் சிலம்பம் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவா் முதல் இடம் பிடித்தாா். கும்பகோணத்தில் கடந்த ஜன. 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, இ... மேலும் பார்க்க