மாவட்ட சதுரங்கப் போட்டி: 178 மாணவா்கள் பங்கேற்பு
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியுடன் ஹோட்டல் சதாபிஷேகம் இணைந்து இப்போட்டியை நடத்தியது. இதில் மாவட்டத்தில் உள்ள, 38 பள்ளிகளைச் சோ்ந்த 178 மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். தருபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
சிறப்பு அழைப்பாளராக ஹரி, சதாபிஷேகம் ஹோட்டல் நிா்வாக இயக்குநா் எஸ். குமரன், மேலாளா் முத்துக்குமாா், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்ஸாண்டா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
போட்டிகளை உடற்கல்வி இயங்குநா் எஸ். முரளிதரன், சதுரங்கப் போட்டி நடுவா் கதிா்வேல் ஆகியோா் தலைமையில் 20 போ் கொண்ட உடற்பயிற்சி ஆசிரியா் குழுவினா் நடத்தினா். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. பள்ளி செயலா் பாஸ்கரன், முதல்வா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.